இங்கிலாந்து புறப்பட்டார் பிரதமர்... 120 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்பு...

பருவ நிலை தொடர்பான உலக தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். 

இங்கிலாந்து புறப்பட்டார் பிரதமர்... 120 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்பு...

இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சர்வதேச பருவநிலை மாற்றம் மாநாடு இன்று துவங்குகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதற்கென போப் பிரான்சிஸ் உடனான சந்திப்புக்கு பின் இத்தாலி பயணத்தை நிறைவு செய்த மோடி, அங்கிருந்து இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளார். 

இந்த  உயர்மட்ட கூட்டமானது  வருகிற நவம்பர் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கென வருகிற நவம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் அங்கு தங்கும் மோடி முக்கிய ஆலோசனைகளில் கலந்து கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக அவர் இந்தியா- இங்கிலாந்து உறவு தொடர்பான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுகிறார். அதுமட்டுமல்லாது அந்நாட்டு சுற்றுசூழல் மற்றும் மின்சக்தித்துறை அமைச்சர்களையும் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.