அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி!!

சர்வதேச பொருளாதார நெருக்கடி சூழல், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாணயங்கள் வலுவிழந்து காணப்படுதல் ஆகியவற்றின் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அண்மைக்காலமாக சரிந்து வருகிறது.

இதனால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் இன்று வர்த்தகத்தின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 78. 30 அளவுக்கு சரிந்துள்ளது. வரலாற்றிலேயே டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 78க்கு மேல் சரிவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.