நேட்டோ தாக்குதலுக்கு பயன்படுத்திய தாலிபன் நிறுவனரின் கார் கண்டெடுக்கப்பட்டது:

மறைந்த தாலிபான் நிறுவனர் முல்லா ஒமர் கடந்த 2001 ம் ஆண்டு நேட்டோ தாக்குதலுக்கு பயன்படுத்திய காரை, 21 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நேட்டோ தாக்குதலுக்கு பயன்படுத்திய தாலிபன் நிறுவனரின் கார் கண்டெடுக்கப்பட்டது:

1959 ம் ஆண்டு பிறந்த முல்லா முகமது ஒமர், 1994 ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் அமைப்பை நிறுவியவர். இந்த அமைப்பை பயன்படுத்தி ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்தார். தாலிபான் அமைப்பினர் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது கடந்த 2001 ம் ஆண்டு தாக்குதல் நடத்தியது. அதனால் அமெரிக்கா, தாலிபான் அரசை நீக்கிவிட்டு, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து கொண்டது. இதில் அச்சமடைந்த தாலிபான் தலைவர் முல்லா ஒமர், தனது காரில் அமெரிக்கா ராணுவத்தினரிடமிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் 2013 ம் ஆண்டு அவர் உயிரிழந்துவிட்டதாக தாலிபான்கள் தெரிவித்தனர். முன்னாள் தாலிபான் அதிகாரி அப்துல் ஜப்பார் ஒமாரி, இது பற்றி கூறுகையில், "இந்த வாகனம் தொலைந்து போகாமல் இருக்க ஒமரின் நினைவாக முஜாஹிதீன்களால் புதைக்கப்பட்டது," என கூறி இருந்தார். 

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்த தாலிபான்கள் ஒடுக்கு முறையை செய்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியானது.  இந்நிலையில், தங்களது தலைவர் பயன்படுத்திய காரை தேடி வந்துள்ளனர். அந்த வகையில் அவரது காரை பூமியிலிருந்து தோண்டி எடுத்துள்ளனர். தற்போதும் இந்த கார் பயன்படுத்த கூடிய வகையில் உள்ளதாகவும், அதன் முன்பக்க கண்ணாடி மட்டும் தான் சேதமடைந்துள்ளதாகவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அந்த காரை வாகன புதைகுழியில் இருந்து ஆண்களால் கை மண்வெட்டிகளைப் பயன்படுத்தி தோண்டி எடுத்து அந்த படங்களை தாலிபான் ஊடக அதிகாரிகள் வெளியிட்டனர்.    

இந்த காரை தலைநகரின் தேசிய அருங்காட்சியகத்தில் "பெரிய வரலாற்று நினைவுச்சின்னமாக" காட்சிப்படுத்த வேண்டும் என்று தலிபான்கள் விரும்புவதாகவும் தெரிவிக்காட்டுள்ளது.