49 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில்.. வெப்பத்தை தாங்க முடியாமல்  486 பேர் உயிரிழப்பு.!  

49 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில்.. வெப்பத்தை தாங்க முடியாமல்  486 பேர் உயிரிழப்பு.!  

கனடாவில் சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் 486 பேர் உயிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு கடந்த மூன்று நாட்களாக அனல்காற்று வீசி வருகிறது. சுமார் 49 புள்ளி 6 டிகிரி செல்சியஸுக்கு வெப்பம் சுட்டெரித்து வருவதால், அங்கு தார் சாலைகளும் உருகத்தொடங்கியுள்ளன. மேலும் வெயில் காரணமாக பலர் வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.இதனால் அங்கு தடுப்பூசி போடும் பணியும் தடைபட்டுள்ளது. 

இந்நிலையில் கனடாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மரங்கள் தானாகவே தீப்பற்றி எரிந்து வருகின்றன. காட்டு தீப்போல் கிராமங்களுக்கும் தீபரவியுள்ளதால் அங்கு வசிக்கும் ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பல வீடுகளும் தீக்கிரையாகி வரும் நிலையில், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அதீத வெயிலால் முதியோர்களும், குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வெயிலை தாங்க முடியாமல் இதுவரை 486 பேர் உயிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.