உயர் பாதுகாப்பை அளிக்கும் ஸ்புட்னிக் தடுப்பூசி கலவை...

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் கூறுகளை அமெரிக்கா மற்றும் சீன தடுப்பூசிகளுடன் கலவையாக்கி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி தென்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

உயர் பாதுகாப்பை அளிக்கும் ஸ்புட்னிக் தடுப்பூசி கலவை...

ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை கலவையாக்கி பயன்படுத்துவதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான ஆற்றல் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர். இதையடுத்து பலதரப்பட்ட தடுப்பூசி தயாரிப்புகளை கலவையாக்கி அதனை கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்த ஆய்வில் சர்வதேச நாடுகள் ஈடுபட்டுள்ளன.

அதன்படி ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் கூறுகளை அமெரிக்கா தயாரிப்பான மாடர்னா, இங்கிலாந்து தயாரிப்பான அஸ்ட்ராஜெனெகா,  மற்றும் சீன தயாரிப்பான சினோஃபார்ம் ஆகிய 3 தடுப்பூசிகளுடன் இணைத்து கலவையாக்கி பயன்படுத்துவது குறித்த ஆய்வு புவெனஸ்-அயர்ஸ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில் தடுப்பூசி கலவை கொரோனாவுக்கு எதிராக உயர் பாதுகாப்பை வழங்குவது நிரூபணமாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.