43 வருடங்களில் 53 திருமணங்கள்!! கேட்டால் மன நிம்மதி தேடி அலைந்தாராம்!!!

சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஒருவர் 53 முறை திருமணம் செய்துள்ளார். அதற்கு காரணமாக ஸ்திரத்தன்மை மற்றும் மன அமைதியைக் காணும் நோக்கத்துடன் தான் எனவும், தனிப்பட்ட இன்பத்திற்காக அல்ல எனவும் தெரிவித்திருக்கிறார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

43 வருடங்களில் 53 திருமணங்கள்!! கேட்டால் மன நிம்மதி தேடி அலைந்தாராம்!!!

63 வயதான அபு அப்துல்லா, "நூற்றாண்டின் பலதார மணம் செய்பவர்" என்று அழைக்கப்படுகிறார்.அதற்கு காரணமும் இருக்கிறது. ஏன் என்றால், அவர் 43 வருடங்களில் மட்டுமே 53 திருமணங்கள் செதிருக்கிறார். ஆம்! ஆச்சிரியமாகத் தான் இருக்கும். நாம் இதனை சுயநலம் எனக் கூறுவோம். ஆனால், அதனை அவர் மறுக்கிறார். மேலும், ஸ்திரத்தன்மை மற்றும் மன அமைதியைக் காணும் நோக்கத்துடன் தான் இத்தனை திருமணங்கள் எனவும், தனிப்பட்ட இன்பத்திற்காக அல்ல எனவும் தெரிவித்தது அதிர்ச்சியாக இருக்கிறது.

இது குறித்து பேசிய அபு, “நான் 53 பெண்களை திருமணம் செய்துகொண்டேன். எனக்கு 20 வயது இருக்கும் போது என் முதல் திருமணம் நடந்தது. என் முதல் மனைவி என்னை விட ஆறு வயது மூத்தவர். நான் முதல் திருமணம் செய்தபோது, ​​எனக்கு வசதியாகவும், குழந்தைகளும் இருந்ததால், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்யத் திட்டமிடவில்லை.

மேலும் படிக்க | கருத்துரிமையும் பறிக்கப்பட்டதா சவுதி அரேபியாவில்?? 45 வருடங்கள் தண்டனை அளிக்கப்பட்ட பெண்!!!!

ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு, உறவில் சிக்கல்கள் ஏற்பட்டன, இதனால், எனது 23 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். என் முடிவை முதல் மனைவியிடம் தெரிவித்து தான் மறுமணம் செய்தேன். ஆனால், முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளுக்கு இடையில் பிரச்சினைகள் இருந்தபோது, ​​​​மூன்றாவது மற்றும் நான்காவது முறையாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.” என மிகவும் சாதுவாகப் பேசுகிறார்.

Was looking for stability..': 63-yr-old Saudi man who married 53 women

தனது முதல் இரண்டு மனைவிகலை விவாகரத்து செய்த அபு, தனக்கு மகிழ்ச்சி தரும் பெண்ணைத் தேடும் நோக்கத்தில் இது வரை 53 திருமணங்கள் செய்திருக்கிறார். தனது திருமணங்களில், ஒரு திருமணம் மட்டும் ஒரு நாள் நீடித்ததாகக் கூறுகிறார் அபு. 63 வயதான அவர் பெரும்பாலும் சவூதி பெண்களை மணந்தாலும், தனது வெளிநாட்டு வணிக பயணங்களின் போது அந்நாட்டு பெண்களையும் திருமணம் செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் படிக்க | கோத்தபய இலங்கை திரும்புவாரா? வெளியான புதிய தகவல்!

இத்தனை திருமணத்திற்கு பிறகும், தான் ஒரு நிம்மதி தரும் இளம் பெண்ணைக் கண்டுபிட்க்க முடியவில்லை என வருந்துகிறார். இதில் தற்போது, மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், மறுமணம் செய்து கொள்ளும் எண்னம் இல்லை என கூறுகிறார்.

90’ஸ் கிட்ஸ் இங்கு பெண்ணில்லாமல் தவித்து வரும் நிலையில், தனது மனநிம்மதிக்காக 53 திரும்ணங்கள் செய்து கொண்ட முதியவர் மீது பலருக்கும் வயித்தெரிச்சல் இருப்பதில் எந்த தவறும் இல்லை.

--- பூஜா ராமகிருஷ்ணன்

53 marriages in 43 years – 63-year-old Saudi Arabian businessman says the  strange reason! | Saudi Man explains why he married 53 times in 43 years  Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online