ரஷ்யாவின் அணு ஆயுதத் தாக்குதல் உறுதி.. எதிர்கொள்ள உலகம் பல வழிகளிலும் தயாராக இருக்க வேண்டும் - ஜெலன்ஸ்கி

ரஷ்யாவின் அணு ஆயுதத் தாக்குதலை எதிர்கொள்ள உலகம் பல வழிகளிலும் தயாராக இருக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் அணு ஆயுதத் தாக்குதல் உறுதி.. எதிர்கொள்ள உலகம் பல வழிகளிலும் தயாராக இருக்க வேண்டும் - ஜெலன்ஸ்கி

போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதையடுத்து உக்ரைன் மீது ரஷ்யா மூர்க்கத்தனமாக தாக்குதலைத் தொடங்கியுள்ளது. கீவ் நகரில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையை நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுககணைகளை பயன்படுத்தி அழித்தது. மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் இன்று 6 மணிக்குள் சரணடையவும் கெடு விதித்துள்ளது.

இந்தநிலையில், காணொலியில் பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமா என்று காத்திருக்கத் தேவையில்லை என்றும் அதனை எதிர்கொள்ள உலகம் பல வழிகளிலும் தயாராக வேண்டும் என்று குறிப்பிட்டார். பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி மற்றும் துருக்கி உட்பட பல நாடுகள் தயார் நிலைக்கு வந்து விட்டதாகவும் கூறினார். உக்ரைனுக்கு இப்போது கிடைத்திருக்கும் ஆயுதங்கள் போதுமானதாக இல்லை என்று கூறிய அவர், மரியுபோலின் நிலை மோசமாக உள்ளதாகத் தெரிவித்தார்.