உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.. அவசரகால எண்ணெய் இருப்பில் கை வைத்த ஜோ பைடன்!! இதுவே முதல்முறை?

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அமெரிக்க அவசரகால இருப்பில் இருந்து அதிகளவில் எண்ணெய்யை எடுத்து பயன்படுத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.. அவசரகால எண்ணெய் இருப்பில் கை வைத்த ஜோ பைடன்!! இதுவே முதல்முறை?

உக்ரைன் மீதான தாக்குதல், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

அந்தவகையில், அமெரிக்காவிலும் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் விலை உயரத் தொடங்கியுள்ளன. இதையடுத்து அவசரகால இருப்பில் கைவைக்க வேண்டிய நிலைக்கு அதிபர் ஜோ பைடன் தள்ளப்பட்டுள்ளார். மே மாதம் தொடங்கி, ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் என்ற கணக்கில் ஆறு மாதங்களுக்கு இருப்பில் இருந்து வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றிலேயே அவசர இருப்பில் இருந்து இவ்வளவு பெரிய அளவிற்கு எண்ணெய் எடுப்பது இதுவே முதல்முறை என்றும், உற்பத்தியை அதிகரிக்கும் வரையில் இடைக்காலத் தீர்வாக இதனை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தட்டுப்பாட்டைப் போக்க எண்ணெய் நிறுவனங்கள் கூடுதல் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.