ஜோ பைடன் கோரிக்கை: இனிமேல் துப்பாக்கி வாங்குவதற்கு வயது 21 ஆக இருக்க வேண்டும்!

நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை வரம்பு 18ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜோ பைடன் கோரிக்கை: இனிமேல் துப்பாக்கி வாங்குவதற்கு வயது 21 ஆக இருக்க வேண்டும்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பஃபலோ சூப்பர் மார்க்கெட்டில் கடந்த மாதம் கவச உடை அணிந்த வந்த 18 வயது இளைஞர் ஒருவர் திடீரென சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க கூறி சட்டம் இயற்றுபவர்களுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் தற்போது நியூயார்க் மாகாண கவர்னர் துப்பாக்கி சீர்திருத்த சட்டங்களின் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.