"இரு நாடுகளின் உறவு வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும்" - ரிஷி சுனக் பேச்சு!

"இரு நாடுகளின் உறவு வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும்" - ரிஷி சுனக் பேச்சு!

இந்தியாவும் இங்கிலாந்தும் இணைந்து பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவோம் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்:

இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே ரிஷி சுனக் பிரதமர் ஆகி இருப்பதற்கு மகிழ்ச்சி என்று ட்வீட் செய்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தொலைப்பேசி வாயிலாக அழைத்து மீண்டும் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

இதையும் படிக்க: பாஜகவை சரமாரியாக தாக்கி பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி!

வாழ்த்து தெரிவித்த மோடி:

அப்போது, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான கூட்டாண்மை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம் எனவும், இலவச வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பது குறித்து பேசியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நன்றி கூறிய ரிஷி சுனக்:

இந்நிலையில் முக்கியமான ஒரு புதிய பொறுப்பைத் தொடங்கும்முன், பிரதமர் மோடி வாழ்த்தியதற்கு நன்றி என ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு விஷயங்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் நிலையில், வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.