அறிவித்தப்படி எரிபொருள் விநியோகிக்காததை கண்டித்து இலங்கை மக்கள் சாலை மறியல் போராட்டம்!

இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் எரிபொருள் விநியோகிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அறிவித்தப்படி எரிபொருள் விநியோகிக்காததை கண்டித்து இலங்கை மக்கள் சாலை மறியல் போராட்டம்!

கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிகுள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஹட்டன், பிள்ளையார் கோவில் சந்திப்பில் சிபேட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு மண்ணெண்ணெய் வராததால், வரிசைகளில் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தொடர்ந்து, நேற்று மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், பொதுமக்கள் வரிசையில் அணிவகுத்து நின்றனர். ஆனால் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் ஹட்டன் - கொழும்பு பிரதான சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.