நியூயர் பிறந்தாச்சு...முதலில் புத்தாண்டு கொண்டாடிய நாடு...கொண்டாட்டத்தில் மக்கள்...!

நியூயர் பிறந்தாச்சு...முதலில் புத்தாண்டு கொண்டாடிய நாடு...கொண்டாட்டத்தில் மக்கள்...!

புத்தாண்டு பிறந்ததையொட்டி, வான வர்ணஜாலங்களுடன்  மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

புத்தாண்டு பிறந்தாச்சு:

இந்திய நேரப்படி சரியாக நான்கு முப்பது மணியளவில் நியூசிலாந்தில் ஆண்டுதோறும் புதுவருடம் பிறக்கும். இதனால் உலகிலேயே புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடாக நியூசிலாந்து பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: 6000 செவிலியர்களுக்கு...உடனடியாக ஆணை வழங்க வேண்டும்...தவறினால் பாஜக...அண்ணாமலை ஆவேசம்!

வானவேடிக்கை கொண்டாட்டம்:

தொடர்ந்து, புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவரில் வானவேடிக்கைகள் நடைபெற்றன. அதனை ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். 

அடுத்தடுத்து பிறந்த நியூயர்:

இதை்தொடர்ந்து மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி உள்ளிட்ட 3 தீவுகளிலும் புத்தாண்டு பிறந்தது. இதையடுத்து, சத்தாம் தீவில் புத்தாண்டு பிறந்ததை அடுத்து வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.