7 மாத குழந்தைக்கு தவறுதலாக செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி..

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் கட்டம் நடைபெற்று வரும் நிலையில் 7 மாத குழந்தைக்கு தவறுதலாக தடுப்பூசி செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 மாத குழந்தைக்கு தவறுதலாக செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி..

தென்கொரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில் செப்டம்பர் மாதம் இடையில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு  தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த சூழலில் தென்கொரியாவில் 7 மாத பச்சிளம் குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சியோங்னம் நகரில் உள்ள 7 மாத குழந்தை வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளது இதை தொடர்ந்து அந்த குழந்தையின் தாய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர் வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்துவதற்கு பதிலாக கொரோனா தடுப்பூசியினை செலுத்தியுள்ளார்.இதையடுத்து அந்த குழந்தையினை மருத்துவமனையிலேயே வைத்து குழந்தையின் நிலையை கவணித்து வந்துள்ளனர்.அதிர்ஷ்டவசமாக அக்குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து குழந்தையின் தாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் இந்த சம்பவம் தற்போது வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.