தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல உதாசீனப்படுத்துவேன் - அதிபரின் சர்ச்சை பேச்சு! 

தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல உதாசீனப்படுத்துவேன் என்று பிரான்ஸ் அதிபர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல உதாசீனப்படுத்துவேன் - அதிபரின் சர்ச்சை பேச்சு! 

தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல உதாசீனப்படுத்துவேன் என்று பிரான்ஸ் அதிபர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது. பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில், இம்மானுவேல் மேக்ரான் இவ்வாறு பேசியிருப்பது  அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் பேசும்போது, தடுப்பூசி செலுத்தாது செலுத்தாதவர்களை  நான் சிறைக்கு அனுப்ப மாட்டேன், அவர்களை கட்டாயப்படுத்தி தடுப்பூசியின் செலுத்த வைக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் அவர்களை உணவகத்தில் உணவு அருந்தவோ, காபி குடிக்கவோ, படம் பார்க்கவோ அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல உதாசீனம் படுத்துவேன் என்று கூறியுள்ளார்.இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு அதிபர் மக்கள் குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.