கடும் பனிப்புயலில் சிக்கி தவிக்கும் ஜப்பான்...உயரும் பலி எண்ணிக்கை!!!

கடும் பனிப்புயலில் சிக்கி தவிக்கும் ஜப்பான்...உயரும் பலி எண்ணிக்கை!!!

குளிர்காலத்தில் ஜப்பானில் கடும் பனிப்பொழிவுடன் பலத்த காற்று வீசி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  பனிப்புயல் காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவைப் போலவே ஜப்பானும் பனிப்புயலின் பிடியில் சிக்கியுள்ளது.  ஜப்பானில் குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவுடன் பலத்த காற்றும் வீசி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  பனிப்புயல் காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பானின் வடக்குப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் பெரும்பாலான சாலைகள் பனியால் மூடப்பட்டிருப்பதால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் பனியில் சிக்கியுள்ளன. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  சமாதிக்கு செல்வதிலும் அரசியலா...ராகுலின் திட்டம் என்ன?!!