என் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்...  அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சு...

ஆப்கான் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

என் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்...  அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சு...

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோபைடன், ஆப்கனில் இருந்து அமெரிக்க படை வெளியேற்றப்பட்ட முடிவுக்கு தான் முழு பொறுப்பேற்பதாகவும், இம்முடிவு முன்பு எடுக்கப்பட்டிருந்தால் அது உள்நாட்டு போருக்கு வழிவகுத்திருக்கும் எனவும் கூறினார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ இருப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முடிவு பொதுமக்கள், ராணுவ ஆலோசகர்கள், சேவைத் தலைவர்கள் மற்றும் களத்தில் தளபதிகளின் ஒருமித்த பரிந்துரையின் அடிப்படையில் எடுத்ததாகவும் கூறினார். இந்த முடிவானது சரியான, புத்திசாலித்தனமான, மற்றும் சிறந்த முடிவு எனவும் கூறினார்.