ஜப்பானை அச்சுறுத்தும் லூபிட்... முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்...

ஜப்பானை அச்சுறுத்தி வரும் லூபிட் புயல்

ஜப்பானை அச்சுறுத்தும் லூபிட்... முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்...

ஜப்பானின் தெற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியங்களை லூபிட் என்ற புயல் அச்சுறுத்தி வருகிறது.‌ இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியங்களில் 90-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் மீரினே புயல் அச்சுறுத்தல் காரணமாக தலைநகர் டோக்கியோ அருகே உள்ள சிபா நகரிலிருந்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் நெருங்கி வரும் நிலையில்  டோக்காய் மற்றும் கான்டோ பிராந்தியங்கள் மற்றும் இசு தீவுகளின் கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை தீவிரமடைந்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த பகுதியில் 180 மிமீ வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லூபிட் புயல் தென்மேற்கு ஜப்பானில் கரையை கடக்கிறது என கணிக்கப்பட்டுள்ளது.