உருமாற்றமடைந்ததிலேயே அதிக ஆபத்து வாய்ந்த புதிய கொரோனா கண்டுபிடிப்பு.! அதிர்ச்சியில் சுகாதார அமைச்சகம்.!  

உருமாற்றமடைந்ததிலேயே அதிக ஆபத்து வாய்ந்த புதிய கொரோனா கண்டுபிடிப்பு.! அதிர்ச்சியில் சுகாதார அமைச்சகம்.!  

கொரோனா வைரசின் டெல்டா மாறுபாட்டை காட்டிலும் மிகவும் ஆபத்தான லாம்டா திரிபு, 30க்கு மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார நிறுவனம் தனது ‘வேரியண்ட் ஆப் இன்ட்ரஸ்ட்’ பட்டியலில் புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ் திரிபு ஒன்றை சேர்த்துள்ளது. இதற்கு லாம்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவை அச்சுறுத்திய டெல்டா வகை மாறுபாட்டை காட்டிலும் மிகவும் ஆபத்தானது என ஐரோப்பிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

இதனிடையே பெருவில் 'லாம்டா' மாறுபாடு அதிகம் பரவி வருவதாகவும், கடந்த இரண்டு மாதங்களில் அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளில் 82 சதவீத லாம்டா மாறுபட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாறுபாட்டின் பாதிப்பு உலகின் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.