அமெரிக்காவில் அதிகரித்து வரும் குற்றங்கள்...!!!!

அமெரிக்காவில் அதிகரித்து வரும் குற்றங்கள்...!!!!

 அமெரிக்காவில் சாதாரண மக்களைத் தவிர, இப்போது போலீஸ் அதிகாரியின் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது. ஹார்ன் லேக் பகுதியில் ஒரு போலீஸ் அதிகாரி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி பலத்த காயம் அடைந்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காயமடைந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. நான்காவது சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார். 

அதே நாளில், வாஷிங்டன் டிசியில், இரண்டு சக மாணவர்களை சுட்டுக் காயப்படுத்தியதற்காக, 15 வயது இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு 2,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாஷிங்டன் டிசி பெருநகர காவல்துறை, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.  இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 800 அதிகமாகும். அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை 4.30 மணியளவில் தொடங்கிய துப்பாக்கிச் சூட்டில் 19 வயதான ரமோன் ஸ்மித் என்பவர் மூன்று பேரைக் கொன்றதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு விதிமுறை மீறல்..!!!!