சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் வேண்டுமென்றே வீழ்த்தப்பட்டது? - அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அமெரிக்க அதிகாரிகள்!

சீனாவில் 132 பயணிகளுடன் சென்று விபத்துக்குள்ளான விமானம்,  வேண்டுமென்றே மலையில் மோதி வீழ்த்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் வேண்டுமென்றே வீழ்த்தப்பட்டது? - அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அமெரிக்க அதிகாரிகள்!

சீனாவின் கிழக்கு பகுதியான குன்மிங்கிலிருந்து கடந்த மார்ச் மாதம்  குயான்சு நோக்கி 132 பேருடன் புறப்பட்ட ஜெட் விமானம் வூசைவ் நகரில் உள்ள மலை ஒன்றின் மீது மோதியது. இதில் 9 பணிக்குழுவினர் உள்பட 132  பேரும் பரிதபாமாக உயிரிழந்தனர்.

இந்தநிலையில் இதுதொடர்பாக விமானத்திலிருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை வைத்து ஆய்வு மேற்கொண்டதில், விமானம் வேண்டுமென்றே கடைசி நிமிடத்தில் மலையின் மீது மோத விடப்பட்டதாக அமெரிக்கா அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஒருவரின் தூண்டுதலின் பேரில் விமானி மலையின் மீது விமானத்தை மோதவிட்டிருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று நடுவானில் பறந்த விமானம் செங்குத்தாக மலையின் மீது மோதி தீப்பற்றியது குறிப்பிடத்தக்கது.