சீனா தான் தங்களது மிக முக்கியமான கூட்டாளி - தாலிபான்கள் அறிவிப்பு

சீனா தங்களது மிக முக்கியமான கூட்டாளி என்றும் அந்நாட்டின் ஒன் ரோடு ஒன் பெல்ட் திட்டத்திற்கு தாங்கள் ஆதரவு தரப்போவதாகவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தாலிபான்கள், தங்கள் அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளன. இந்நிலையில் சீனா தங்களது நெருக்கமான கூட்டாளி எனத் தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஜித் தெரிவித்துள்ளார். தங்களது அரசு சீனாவின் ஒன் ரோடு ஒன் பெல்ட் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் என்றும் இதன்மூலம் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா நாடுகளுடன் சாலைவழித் தொடர்பு அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே, தொழில் பூங்காக்கள் உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை மறுகட்டமைப்பு செய்வதிலும், தங்கள் நாட்டில் உள்ள அதிகப்படியான தாமிரத்தை சந்தைப்படுத்துவதிலும் சீனாவின் உதவியை நாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஷ்யாவுடனும் சிறந்த உறவை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.