விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்....யாரோ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானம்!!!

விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்....யாரோ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானம்!!!

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அழைப்பை தொடர்ந்து விண்ணில் பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சர்வதேச அழைப்பு:

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த சர்வதேச அழைப்பை அடுத்து, ஜப்பான் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.  இச்சம்பவம் குறித்து தகவல் அளித்த ஜப்பான் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் அமைப்பான என்எச்கே, டோக்கியோவில் உள்ள நரிடா விமான நிலையத்தில் இருந்து ஃபுகுவோகாவுக்கு விமானம் சென்று கொண்டிருந்ததாகவும், இந்த நேரத்தில் யாரோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.  

தரையிறக்கம்:

வெடிகுண்டு பற்றிய தகவல் கிடைத்ததும் விமானத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து விமானம் சுபு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது.  விமானத்தில் பயணித்த 136 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

வெடிக்காத வெடிகுண்டு:

தீவிர சோதனைக்கு பிறகு விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று என்எச்கே தெரிவித்துள்ளது.  மேலும் விமானம் தரையிறக்கப்படும் போது ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் என்ஹெச்கே கூறியுள்ளது.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:   சிறுநீர் கழித்ததால் பறிபோன வேலை...மிஸ்ரா செய்தது என்ன?!!