விமானத்தின் “சரக்கு பெட்டியில் தூங்கி போனதால்” அபுதாபி சென்றடைந்த இண்டிகோ பணியாளர்!!

இண்டிகோ விமானம் அபுதாபியில் தரையிரங்கிய பின்பு பணியாளரின் உடல்நிலை சீராக உள்ளதா என  பரிசோதனை செய்த மருத்துவர்கள்.

விமானத்தின் “சரக்கு பெட்டியில் தூங்கி போனதால்” அபுதாபி சென்றடைந்த இண்டிகோ பணியாளர்!!

பிரபலமான பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ விமானத்தில் பயணிகளின் பேக்கேஜ்களை கையாளுபவர், பயணிகளின் லக்கேஜ்களை விமானத்தில் வைக்கும் இடத்திலேயே தூங்கி விட்டார். தூங்கிய அந்நபர் விமானம் புறப்பட ஆரம்பித்தவுடன் எழுந்ததாக சொல்லப்படுகிறது.

மும்பையில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் ஞாயிற்றுகிழமை அன்று இச்சம்பவம் நடந்ததாக தெரிகிறது.சுமார் இரண்டு மணிநேரம் கழித்து அபுதாபியில் விமானம் தரையிரங்கியுள்ளது. பின்னர் பேக்கேஜ்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை திறந்து பார்க்கையில் தான் அவர் விமானத்தில் இருப்பதையே நிறுவனம் அறிந்திருக்கிறது.

இதன்பின் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விமானம் அபுதாபியில் தரையிரங்கிய பின்பு பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் லக்கேஜ்கள் வைக்கப்பட்ட இடத்தில் சுமார் இரண்டு மணிநேரம் இருந்த பணியாளரின் உடல்நிலை சீராக உள்ளதா என மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

பரிசோதித்ததில் அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.அபுதாபியில் உள்ள அதிகாரிகளிடம் போதிய அனுமதிகளை பெற்ற பின்பு, இண்டிகோ பணியாளரான அவர் அதே விமானத்தின் மூலம் மும்பைக்கு திருப்பி அனுப்பட்டார் என விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இச் சம்பவத்தில் தொடர்புடைய விமான நிறுவனத்தின் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் DGCA அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த விவகாரம் குறித்து இண்டிகோ செய்தித் தொடர்பாளர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில் இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு தெரிய வந்ததும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததாகவும், தற்போது அவை விசாரணையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.


 
இதுகுறித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் செவ்வாய்கிழமை அன்று விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிய படுத்தியுள்ளது.