சீனாவில் பெருந்தொற்றுக்கு இடையே 4 வயது சிறுவனுக்கு புதிதாக பறவை காய்ச்சல்.. மக்கள் பீதி!!

சீனாவில் பெருந்தொற்றுக்கு இடையே 4 வயது சிறுவனுக்கு புதிதாக பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் பெருந்தொற்றுக்கு இடையே 4 வயது சிறுவனுக்கு புதிதாக பறவை காய்ச்சல்.. மக்கள் பீதி!!

சீனாவில், கொரோனா பெருந்தொற்று  தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிதாக பறவை காய்ச்சலும் பரவத்தொடங்கியுள்ளது.

இதையடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த பரிசோதனைகளை தீவிரப்படுத்திய சீன அரசு, முக்கிய நகரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதித்துள்ளது. இந்தநிலையில் 2002-ல் வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட H3N8 வகை பறவை காய்ச்சல் முதன்முறையாக சீனாவில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தொற்று அதிகம் பரவும் தன்மை இந்த வைரஸுக்கு இல்லாததால் அச்சம் அடைய வேண்டிய நிலை  இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.