பாகிஸ்தான் எல்லையை மூடியதால் நெரிசலில் சிக்கி தவிக்கும் ஆப்கான் மக்கள்...

பாகிஸ்தான் எல்லையை மூடியதால் நெரிசலில் சிக்கி தவிக்கும் ஆப்கான் மக்கள்...

ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் அந்நாட்டில் குடியிருந்த இந்தியா, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட பிற நாட்டு மக்கள் அனைவரும் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறினர். 

 இந்நிலையில், தலிபான்கள் ஆட்சி அமைத்த சிறிது நாட்களிலேயே ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சில மோசமான செயல்களை செய்தனர்.மேலும் பெண்களுக்கான உரிமைகளும் மறுக்கப்பட்டு வந்தது. மேலும் மக்கள் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க காபூல் விமானநிலையத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு தலிபான்கள் தடை விதித்தனர். இதனால் அருகில் இருக்கும் பாகிஸ்தானுக்கு செல்ல ஆப்கான் மக்கள் அங்கு குவிந்துள்ளனர்.

 இந்த நிலையில் கூட்டம் அதிகளவில் வருவதால் பாகிஸ்தான் தனது எல்லையை மூடியது. இதனால் அத்தியாவசிய தேவைகள் கூட இல்லாமல் எல்லையில் குவிந்து வருகின்றனர். மேலும் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.