என்னது 1 கிலோ டீத்தூள் ஒரு லட்சம் ரூபாயா!! தேநீர் பிரியர்கள் ஷாக்!

அஸ்ஸாம் மாநிலத்தில் அரிய வகை கோல்டன் டீத்தூள் ரூபாய் 99,999 க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

என்னது 1 கிலோ டீத்தூள் ஒரு லட்சம் ரூபாயா!! தேநீர் பிரியர்கள் ஷாக்!

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் அதிகமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.அங்கு விளைந்து வரும் அரியவகை கோல்டன் டீத்தூள்கள் கவுகாத்தி தேயிலை ஏல நிலையம் மூலம் ஏலமிட்டப்பட்டு வருகிறது. இந்நிலையத்தின் செயலாளர் தினேஷ் பிகானி கூறுகையில் மனோகரி கோல்டு டீத்தூள் சென்ற ஆண்டைக் காட்டிலும் அதிக விலைக்கு ஏலம் போனதாக தெரிவித்துள்ளார். இவை கடந்த ஆண்டு 75000 ரூபாய்க்கு ஏலம்விடப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த அரியவகை டீத்தூளை சவுரவ் வர்த்தக நிறுவனம் ஏலம் எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.இதனின் அதிகபட்ச விலை கிலோவிற்கு 99,999 ரூபாய் என விற்க்கப்படுகிறது. இது போன்ற அரிய வகை டீத்தூளை வெளிநாட்டினர் மிகவும் விரும்பி வருவதாக பிகானி தெரிவித்தார்.இந்த விற்பனை அஸ்ஸாம் தேயிலை விற்பனையில் ஒரு பெரிய மைல் கல்லாக உள்ளது என அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலைகளில் 52 சதவீத விழுக்காடு அஸ்ஸாம் மாநிலத்தில் அதிகம் உற்பத்தியாகிறது. இங்கு விளையும் தேயிலைகள் அதிக விலைக்கு விற்க்கப்பட்டு வருகிறது.

அதிக அளவில் தேயிலைகள் விற்கப்பட்டு வருவதால் அங்கு பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக மூன்றாண்டு காலத்திற்கு வருங்கால வைப்புத்தொகை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையும் தாண்டி அஸ்ஸாமில் 850 சிறிய மற்றும் பெரிய அளவிலான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அதன் பராமரிப்பு பணிகளுக்கு ஏற்றவாறு விலைகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதனை இந்திய தேயிலை ஆணையமும் பரிந்துரைசெய்யபட உள்ளதாக தெரிவித்துள்ளது.