சுற்றுலாவாக இந்தியர் உள்பட 6 பேர் விண்வெளி பயணம்

அமெரிக்காவின் வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விண்கலம் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஸ்ரீஷா பண்ட்லா உள்ளிட்ட 6 பேர் விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

சுற்றுலாவாக இந்தியர் உள்பட 6 பேர் விண்வெளி பயணம்

அமெரிக்காவின் வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விண்கலம் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஸ்ரீஷா பண்ட்லா உள்ளிட்ட 6 பேர் விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

விண்வெளி போட்டியில் வேகமாக முன்னேறி வரும் நிறுவனமான  விர்ஜின் கேலடிக், விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கு சோதனை முயற்சியாக யூனிட்டி-22 என்ற விண்கலத்தை இன்று விண்ணுக்கு செலுத்தியது. விஎம்எஸ் ஈவ் என்ற இரட்டை விமானம் மூலம் நியூ மெக்சிகோவில் இருந்து இந்த விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதில், விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் ரீச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா உள்ளிட்ட 6 பேர் விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

ஓசோன் லேயர் முடியும் தூரம் வரை விமானம் உதவியுடன் பறக்கும் இந்த விண்கலம் அதன்பின் தனியாகப் பிரிந்து விண்வெளியை நோக்கி பறக்கும். தற்போது பூமியில் இருந்து 90 கிலோமீட்டர் உயரம் வரை இந்த விண்கலத்தின் மூலம் பயணிக்க முடியும். அவ்வளவு உயரத்திற்கு சென்றவுடன் எடையற்ற தன்மையையும் விண்வெளியில் பறப்பது போன்றும் உணரலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 90 நிமிடங்களில் இந்த விண்வெளிப் பயணம் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு 400 விண்வெளி பயணங்களை நடத்த விர்ஜின் கேலடிக் திட்டமிட்டுள்ளது என்றும் இதற்காக சுமார் 600 பேர் முன்பதிவு செய்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன