இரண்டு நாட்களில் 3 துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி, 28 பேர் காயம் - ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை!

அமெரிக்காவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நடைபெற்ற 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்திருப்பதுடன் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இரண்டு நாட்களில் 3 துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி, 28 பேர் காயம் - ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை!

அமெரிக்காவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் துப்பாக்கிச்சூடு நடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு காலையில் 3 நகரங்களில் இந்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. பிலடெல்பியாவில், இருவரிடையே ஏற்பட்ட தகராறு துப்பாக்கிச் சண்டையாக மாறியது. பார் மற்றும் உணவு விடுதிகள் உள்ள நெரிசலான பகுதி என்பதால் 3 பேர் உயிரிழந்து 12 பேர் காயமடைந்தனர். 

டென்னசி மாகாணம் சட்டனூகாவில் மதுபானக்கடை அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டு 14 பேர் காயமடைந்தனர். மிச்சிகனில் உள்ள சாகினாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை வரை எந்தவொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலும் சந்தேக நபர்கள் என்று எவரும் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  

அமெரிக்காவில் நடப்பு ஆண்டு மட்டும் 240 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பான சட்ட திருத்தத்திற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆனால், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்த அந்தந்த காலகட்டங்களில் அதிபராக இருந்த அனைவரும் இப்படித்தான் சொன்னார்கள் என்பது வரலாறு. ஆனால்,  பைடைன் காலத்தில் அதிக அளவிலான சம்பவங்கள் என்பதால் உரிய சட்டத்திருத்தத்தை செய்தால் அமெரிக்க மக்கள் நிம்மதி அடைவார்கள்...