பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்- 20 பேர் பலி  

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்- 20 பேர் பலி   

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்தும் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். பேரிடர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை 20 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயங்களுடன் 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மேலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.