என்னது 2 அடி உயர குழந்தையா? பிரிட்டனில் நடந்த சுவாரஸ்யம்

என்னது 2 அடி உயர குழந்தையா? பிரிட்டனில் நடந்த சுவாரஸ்யம்

பிரிட்டனில் இளம்பெண் ஒருவர் 2 அடி உயரமுள்ள குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் சராசரியாக ஒரு அடி உயரத்தில் பிறப்பது சதாரணம்தான். ஆனால்,  பிரிட்டனில் இளம்பெண் ஒருவர் 2 அடி உயரமுள்ள குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த அமே ஸ்மித் என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, அமே ஸ்மித்க்கு, இரண்டு மருத்துவர்கள் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்த போது, 2 அடி உயரமுள்ள குழந்தையை வெளியே எடுத்ததாகவும், எடைபார்க்கும் இயந்திரத்தின் மீது வைக்க முடியாத அளவிற்கு அந்த குழந்தை பெரிதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

5.5 கிலோ எடையுள்ள அந்த குழந்தை சராசரி குழந்தையை விட இரண்டு மடங்கு பெரிதாக காணப்படுகிறது. இந்த குழந்தைக்கு ஜாக்ரிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.