துணிக்கடை உரிமையாளரின் கார் மோதி முதியவர் உயிரிழப்பு!

துணிக்கடை உரிமையாளரின் கார் மோதி முதியவர் உயிரிழப்பு!

சென்னை தியாகராய நகரில் இருசக்கர வாகனத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் ரவிவர்மா (வயது 60). இவர் தனது இருசக்கர வாகனத்தில் தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை சந்திப்பில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த சொகுசு கார் நிலைத் தடுமாறி அவரது இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ரவிவர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுநர் நாகை சம்சுதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் களஞ்சியம் டெக்ஸ்டைலில் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:25 குடும்பங்களை ஒதுக்கி வைத்த ஊர் முக்கியஸ்தர்கள்... பாதிக்கப்பட்டோர் ஊரை காலி செய்யும் அவலம்!!