லடாக்கில் சுற்றித் திரிந்த ஏகே மற்றும் வாரியார்!!!

நடிகர் அஜித் குமாருடன் மஞ்சு வாரியர் இணைந்துள்ள போட்டோக்கள் தர்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லடாக்கில் சுற்றித் திரிந்த ஏகே மற்றும் வாரியார்!!!

நடிகர் அஜித் குமார் தனது வாழ்க்கையில் பாதியை சினிமாவிற்கும், மீதி பாதியை பைக்குகளுக்காகவும் செலவழித்தவர். குறிப்பாக தனது அனைத்து படங்களிலும் ஏதாவது ‘ஒரு’ சீனிலாவது பைக்குகளை வைத்து ஸ்டண்ட் செய்து விடுவார் அவர்.

பைக்குகளின் மீதான அதீத ஆர்வத்தில் இருக்கும் அஜித் குமார், தனது ஏகே 61 படத்தின் ஷூட்டிங்கைத் தொடர்ந்து, சமீபத்தில் ஐரோப்பாவை பைக்கிலேயே சுற்றிவந்தார். அதன் போட்டோக்கள்  இணையத்தில் படு வைரலாகி ரசிகர்களுக்கு பெரும் குஷியைக் கொடுத்தது. மேலும், #AjithKumar எனும் ஹாஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி, அவர் ஐரோப்பாவில் பைக், கார், கப்பல் என படு ஜாலியாக பயணம் செய்யும் புகைப்படங்கள் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஏற்கனவே ஒரு சில போட்டோக்கள் அவரது ட்ரிப்பில் இருந்து வெளியாகி வைரலான நிலையில், தற்போது மேலும் சில போட்டோக்கள் ரசிகர்களால் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஐரோப்பிய சுற்றுலாத்தளங்களில் - உலாவும் நடிகர் அஜித் : வைரலாகும் புகைப்படங்கள்!!

அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்த அளவிலேயே ரசிகர்களைத் திருப்தி படுத்தியதாக குமுறி வரும் ரசிகர்களுக்கு, ஏகே 61 தான் அடுத்த கதியாக இருக்கிறது. வலிமை பட இயக்குனர் எச் வினொத் மற்றும் அதன் தயாரிப்பாளர் போனி கப்பூருடன் மீண்டும் இணைந்து, ஏகே 61 படம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஷூட்டிங் சுமார் ஒரு மாதமாக ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட செட் போட்டு எடுக்கப்பட்டு வந்தது. அதன் ஷெடியூல் முடிந்ததையடுத்து, தனக்கு மிகவும் பிடித்தமான BMW 1200RT பைக்கை எடுத்துக் கொண்டு ஒரு மாபெரும் ஹைக்கிங் ட்ரிப்பை தொடங்கினார் அஜித். தனது பைக் காங்குடன் இணைந்து பெல்ஜியம் தொடங்கி, பல ஐரோப்பிய பகுதைகளுக்கு பைக்கிலேயே சுற்றுலா சென்றிருக்கிறார்.

மிகவும் குறைவான படங்களை மட்டும் கொடுத்து வரும் அஜித், அதிகமாக பொது இடங்களிலும் தலைக்காட்டுவதில்லை. இந்த நிலையில், இவரது சிறு சிறு அப்டேட்டுக்காகவும் காத்திருக்கும் ரசிகர்களுக்கு அவ்வப்போது வெளியாகும் போட்டோக்கள் வரபிரசாதமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | ஏகே 61 படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் செல்லும் ஏகே...! விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்...!

அஜித் குமாரின் BMW 1200RT 1170சிசி இரட்டை சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் அதிகபட்சமாக 124 PHP 125 MN dark திறனைக் கொண்டுள்ளது. இந்தியப் பணத்தில் இருபது லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகும், என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பைக்கில் ஊர் சுற்றும் வாலிபனான அஜித் குமாருடன் தற்போது பிரபல நடிகை மஞ்சு வாரியாரும் இணைந்திருக்கிறார். அதன் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி, படு வைரலாகி வருகிறது. அசுரன் படம் மூலம், பல லட்சம் தமிழ் ரசிகர்களைப் பெற்ற மலையாள நடிகையான மஞ்சு வாரியர் அஜித் குமாருடன் இணைந்து பயணம் செய்வது குறித்த தகவல் வெளியானதில் இருந்து, அனைத்து ரசிகர்களும் படு குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

ஏகே 61 அடுத்து, இந்த ஆண்டின் இறுதிக்குள், அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'ஏகே 62' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்கியின் மனைவி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராவும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தேசியக் கொடியை ஸ்பெயின் முழுவதும் பறக்க விட்ட கோலிவுட்டின் இளம் ஜோடி..!