பிரதமர் மோடியின் செயலால் மாணவர்கள் மகிழ்ச்சி...

பிரதமர் மோடியின் செயலால் மாணவர்கள் மகிழ்ச்சி...

மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2  பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், நேற்றைய கொரோனா தொற்றின் நிலை குறித்து பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி  நேற்று ஆலோசனை நடத்தினார்.  காணொலி வாயிலாக நடந்த இந்த ஆலோசனையில், அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.  

இந்த ஆலோசனைக்குப் பிறகு சிபிஎஸ்இ பிளஸ் டூ பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி  அறிவித்தார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே முக்கியம் எனவும் தெரிவித்தார். பதற்றமான இந்தச் சூழலில் மாணவர்களைத் தேர்வெழுத நிர்பந்திக்கக் கூடாது என கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, பிளஸ் 2 மதிப்பெண்கள் உரிய முறைப்படி  குறிப்பிட்ட காலத்திற்குள் அளிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.