தொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக இளம் நடிகை புகார்... வைரலாகும் பேஸ்புக் பதிவு

தொழிலதிபர் ஒருவரால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நடிகை புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக இளம் நடிகை புகார்... வைரலாகும் பேஸ்புக் பதிவு

 தொழிலதிபர் ஒருவரால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நடிகை புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேசத்தை சேர்ந்த புகழ் பெற்ற இளம் நடிகை போரி மோனி பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். 28 வயதாகும் போரி மோனி பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த ஆண்டு வெளியிட்ட ஆசியாவின் சிறந்த 100 திரை நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.

இந்நிலையில், வங்காளதேசத்தின் மிகப்பெரும் தொழில் அதிபர்களில் ஒருவரான நசீர் முகமது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாகவும் பேஸ்புக் மூலம் பரபரப்பு புகார் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தான் சட்ட அமலாக்க துறையை அணுகியபோது தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், எனவே தனக்கு நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும் எனவும் பேஸ்புக் பதிவு மூலம் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் கோரிக்கை விடுத்தார்.

நடிகை போரி மோனியின் இந்த பேஸ்புக் பதிவு வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வங்காளதேச போலீசார் தொழிலதிபர் நசீர் முகமதை கைது செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.