பள்ளி முதல்வரின் இருக்கையில் அமர்ந்து  போஸ் கொடுத்த குரங்கு... வைரல் வீடியோ

மத்தியபிரதேசத்தில் குரங்கு ஒன்று பள்ளி முதல்வரின் இருக்கையில் அமர்ந்து  போஸ் கொடுத்த  வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

பள்ளி முதல்வரின் இருக்கையில் அமர்ந்து  போஸ் கொடுத்த  குரங்கு... வைரல் வீடியோ

மத்தியபிரதேசத்தில் குரங்கு ஒன்று பள்ளி முதல்வரின் இருக்கையில் அமர்ந்து  போஸ் கொடுத்த  வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

குவாலியரில் உள்ள அரசு பள்ளியில், அண்மையில் குரங்கு ஒன்று பள்ளி வளாகத்திற்குள் புகுந்து,  நேராக பள்ளி முதல்வர் அறையில் உள்ள இருக்கையில் அமர்ந்து அங்கு வருவோரை  ஹாயாக நோட்டமிட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த ஆசிரியர் ஒருவர் இருக்கையில் குரங்கு இருப்பதை பார்த்து மிரண்டு, அதனை விரட்ட முயன்றுள்ளார். ஆனால் குரங்கோ விடாப்படியாக, இருக்கையை பிடித்தபடி  அதில் இருந்த கண்ணாடி கவரை பிய்க்க தொடங்கியுள்ளது. அங்கு வந்த ஆசிரியை ஒருவர் இருக்கையை நோக்கி நெருங்க, குரங்கு பயத்தில் விருட்டென்று அங்கிருந்து வெளியே ஓடியுள்ளது.