18 பேரை தாக்கிய அணில்...உயிருடன் விட்டால் ஆபத்து என அணிலை கொன்ற பொதுமக்கள்...

ஒரு அணில் ஆனது சமீபத்தில் 48 மணி நேரத்தில் 18 பேரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

18 பேரை தாக்கிய அணில்...உயிருடன் விட்டால் ஆபத்து என அணிலை கொன்ற பொதுமக்கள்...

லண்டனில் அணில் ஒன்று பொதுமக்களுக்கு இடையூறு தரும் விதத்தில் சுற்றி திரிந்துள்ளது.குப்பைத் தொட்டிக்கு அருகே உள்ள மரத்தில் இருந்த சாம்பல் நிற அணில் குப்பை போடுவதற்காக  வரும் பொதுமக்களின் மீது பாய்ந்து வருவதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த அணிலானது குப்பை போட வருவோர்களின் மீது பாய்ந்தது மட்டுமல்லாமல் அதனின் நகங்களை வைத்து கீறியும் அவர்களை கடித்தும் வருவதாக கூறுகின்றனர்.மேலும் பொதுமக்களை அணில் கடித்து வந்தது நாளுக்கு நாள் அதிகமான நிலையில், அங்கிருந்த பொதுமக்களில் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடும் நோக்கமாக அதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் என எடுத்து பதிவிட்டது தொடர்ந்து தற்போது  வைரலாகி வருகிறது.

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த அணிலை பிடித்து வனத்தில் விடுவதற்காக அவர்கள் முயற்சித்ததாக சொல்கின்றனர். அப்பகுதியை சேர்ந்த ரெனால்ட்ஸ் என்பவர் அந்த அணிலை வலையை  வைத்து பிடித்து விடலாம் என முடிவு செய்த போது அவரையும் அந்த அணில் மிச்சம் வைக்காமல் கடித்து உள்ளது.

இதன்பின்னர் பிடிப்பட்ட அணில் லண்டனில் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து அந்நாட்டு சட்டப்படி ஒரு குறிப்பிட்ட ரக வகை அணிலை மட்டும் காட்டிற்குள் விடுவது குற்றம் என தெரிவித்துள்ளது.மேலும் இந்த வகையான அணில்கள் சாம்பல் நிற வகை என அதனை கண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஒரு குறிப்பிட்ட வகை அணிலானது காட்டிற்குள் விடப்பட்டால் மற்ற விலங்குகளுக்கு துன்பம் தரும் வகையில் இருக்கும் என அணிலை அவர்கள் கொன்றுவிட்டதாக சொல்கின்றனர்.

இந்த சாம்பல் நிற அணில்கள் பொதுவாகவே மற்றவர்களை தாக்கும் குணம் கொண்டவையாக இருந்து வருவதாகவும், இவை 1876 ஆம் ஆண்டு வட அமெரிக்காவிலிருந்து லண்டனிற்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்போது இந்த வகையான சாம்பல் நிற அணில்கள் பிரிட்டனில் 25 லட்டம் உள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மூலம் சொல்லப்படுகிறது.இந்த அணிலை தற்போது கொல்லாமல் இருந்திருந்தால் இவை மேலும் பலருக்கு துன்பத்தை ஏற்படுத்தி விளைவுகளை உண்டாக்கும் என சமூக ஆர்வலர்கள் இதனை கொன்றுவிட்டதாக கூறுகின்றனர்.