பூசாரியின் அதிர்ச்சியளிக்கும் வழிபாடு!

பூசாரியின் அதிர்ச்சியளிக்கும் வழிபாடு!

புதுக்கோட்டை: கோவில் விழா ஒன்றில், பூசாரி, அதிர்ச்சியளிக்கும் வகையில் வழிபாடு செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா மாந்தாங்குடி கிராமத்தில் அக்னி காளியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. 12-ம் ஆண்டு நடைபெறும் வைகாசி திருவிழா கடந்த நான்காம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

அன்று முதல் அக்னி காளியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற் வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான  பால்குடம் காவடி எடுப்பு மற்றும் கரகம் மதளை எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பூசாரி மாரிமுத்து தலையில் கரகம் சுமக்கும் நிகழ்ச்சியும், ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர்  வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக மதலையை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அப்போது பூசாரி பெண் வேடம் அணிந்து இருந்தார். அப்பொழுது, எரியும்  கட்டையை எடுத்து வாயால் கடித்தும், அக்னி கங்-கை விழுங்கியும் அருள்வாக்கு கூறியுள்ளார். 

இதனை பார்த்து மக்கள் வியப்பில் ஆழ்ந்திருந்தனர். நெருப்பு கட்டையை வாயால் கடிப்பது, வழிபாடாக இருந்தாலும் காணும் மக்களை தவறான முறையில் வழி நடத்துவது போன்று உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.