யாரும் பார்க்கல.. இதே ரூட்ல போடா சூனா பானா..! வைரல் வீடியோ

சீ கல் என்ற கடற்பறவை ஒன்று, கடைக்குள் நுழைந்து, சிப்ஸ் பாக்கெட்டை திருடி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

யாரும் பார்க்கல.. இதே ரூட்ல போடா சூனா பானா..! வைரல் வீடியோ

கைத்தேர்ந்த திருடனை போல், கடற்பறவை ஒன்று அண்மையில் கூலாக கடைக்குள் நடந்து சென்றுள்ளது.

மிகவும் பரிட்சைய பட்ட இடம்போல் அந்த பறவை நேராக சிப்ஸ்கள் வைக்கப்பட்டுள்ள ஷெல்புக்கு சென்று அங்கிருந்த ஒரு பாக்கெட்டை திருடிவிட்டு, நிதானமாக வெளியே சென்றுள்ளது.

இந்த செயலை இணையத்தில் பார்த்த பலரும், பறவையின் செயல் ரசிக்கும்படியாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் சிலர் சீ கல் பறவைகளுக்கு இயற்கையாகவே திருட்டு புத்தி உண்டு எனவும் கருத்து கூறி வருகின்றனர். 

“Just act normal, nobody will notice” pic. twitter.com/oAf4x78AaZ

— Buitengebieden (@buitengebieden_) July 27, 2021