அது போன மாசம்...இது இந்த மாசம்...கணக்கு போட்டு லஞ்சம் வாங்கும் காவல் உதவி ஆய்வாளர்!

அது போன மாசம்...இது இந்த மாசம்...கணக்கு போட்டு லஞ்சம் வாங்கும் காவல் உதவி ஆய்வாளர்!

தள்ளுவண்டி கடையில் காவல் உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லஞ்சம் பெறும் காவலர்:

தாம்பரம் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக இருப்பவர் குமார்.
இவர் அவரது கட்டுப்பாட்டில் உள்ள தாம்பரம் மார்க்கெட் பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் லஞ்சம் பெற்று வந்துள்ளார். அப்படி லஞ்சம் பெற்று செல்லும் எஸ்.ஐ. குமாரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

500 ரூபாய் கேட்ட காவலர்:

அந்த வீடியோவில், உதவி ஆய்வாளர் குமார் தாம்பரம் மார்கெட் பகுதியில் உள்ள ஒரு தள்ளுவண்டி கடைக்குச் சென்று 500 ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு கடையில் இருந்தவர் இந்த மாதத்தின் ஆரம்பத்திலேயே கொடுத்ததாக கூறினார். பின்னர், உதவி ஆய்வாளர் குமார், அது சென்ற மாதத்திற்கான பணம் என்றும், இந்த மாதத்திற்கான பணத்தை சீக்கிரம் கொடுக்குமாறும் கேட்டுள்ளார். இதையடுத்து, கடையிலிருந்தவர் 500 ரூபாயைக் கொடுத்ததும் அதை வாங்கிக் கொண்டு சென்றார்.

இதையும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/You-cant-imagine-how-scared-we-were-Taraiya-Massacre-Justice-will-be-served

வீடியோ வைரல்:

இதனை அங்கிருந்த ஒரு நபர் தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதனால் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மக்கள் கோரிக்கை:

சிறிய கடையில் போதுமான வருமானம் இல்லாமலும், குடும்பத்தை நடத்துவதற்கே அவதிப்பட்டு வரும் சிறு வியாபாரிகளிடம் இவ்வாறு லஞ்சம் பெற்று செல்லும் போலீசார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.