சாலையில் கிடைத்த ரூ. 45 லட்சம்; காவல் நிலையத்தில் ஒப்படைத்த போக்குவரத்துக் காவலர்:

சட்டிஸ்கரில், சாலையோரம் பல லட்சம் ரூபாய் கிடைத்த நிலையில், அதனை, அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் போக்குவரத்துத் தலைவர்.

சாலையில் கிடைத்த ரூ. 45 லட்சம்; காவல் நிலையத்தில் ஒப்படைத்த போக்குவரத்துக் காவலர்:

சட்டிஸ்கர் ஒரு போக்குவரத்துக் காவலர், அதன் தலைநகரான ராய்பூரில் ஒரு பெருமைக்குறிய காரியம் செய்திருக்கிறார். அது பலரையும் நெகிழ வைத்ததோடு, நேர்மைக்கான உருவமாக உருவாகி இருக்கிறார் அவர்.

நிலாம்பெர் சின்ஹா என்ற போக்குவரத்துத் துறை காவலர், நவ ராய்பூர் பகுதியில் காயபந்தாவின் போஸ்டில் பணிபுரிகிறார். மானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையின் ஒரு பகுதியில் காலையில் பையை அவர் கண்டுபிடித்திருக்கிறார் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுக்நந்தன் ரத்தோர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், “அவர் எங்களிடம் ஒப்படைத்த பையில், ரூ. 45 லட்சம் மதிப்பில், 2000 மற்றுய்ம் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருப்பதைக் கண்டதும், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார். பின், சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் பையை டெபாசிட் செய்தார்," என்று சுக்நந்தன் கூறினார்.

நேர்மைக்கு விளக்கம் அளிக்கும் வகையில் காவலர் நிலாம்பெர் செய்த காரியம் பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது. மேலும், பணத்தின் ஆதாரத்தைக் கண்டறிய சிவில் லைன்ஸ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும், இவரது போட்டோவைப் பதிவிட்டு சட்டிஸ்கர் ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் ஷரண் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், இணையத்தில் படு வைரலாகி வருகிறது.