டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…  

பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக அதிகரித்துள்ளது.

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…   

உலக தலைவர்களில் டிவிட்டரில் அதிக பின்தொடர்பவர்களில் பட்டியலில் இந்திய பிரதமர் மோடியும் ஒருவர்.எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அவரது கருத்துகளை, மக்களுக்கான தகவல்களை அவர் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்.

குஜராத் முதல்வராக இருந்தபோது கடந்த 2009ல் முதல்முதலாக டுவிட்டரில் இணைந்த அவரை 2010ல் ஒரு லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்.பின்னர் 2011ல் 4 லட்சமாக உயர்ந்தது. இப்படியாக உயர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஜூலையில் 6 கோடியை கடந்த பாலோயர்கள் எண்ணிக்கை தற்போது 7 கோடியை எட்டியுள்ளது.

உலக அளவில் அதிக டுவிட்டர் பாலோயர்களை கொண்டவர்களின் பட்டியலில் பிரதமர் 11வது இடத்தில் உள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 12.98 கோடி பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவில் மோடிக்கு அடுத்த இடத்தில் 4.5 கோடி பாலோயர்களுடன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளார். பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 7 கோடியை கடந்த நிலையில், அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பலரும் #CongratsModiJiFor70M என்ற ஹேஸ்டேக்கில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.