அது பழைய வீடியோ!!!- வைரல் வீடியோ குறித்து ரயில்வே விளக்கம்!!!

சமீபத்தில் சோசியல் மீடியாக்களில் ஒரு வீடியோ வைரலானதை அடுத்து, ரயில்வே அது குறித்த விளக்கம் கொடுத்துள்ளது.

அது பழைய வீடியோ!!!- வைரல் வீடியோ குறித்து ரயில்வே விளக்கம்!!!

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் அது தயாரிக்கப்படும் இடங்களில் இருந்து அந்ததந்த ஊர்களுக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்படும். அவ்வாறு அனுப்பப்படும் பொருட்கள் பத்திரமாக அவரவர்களிடம் ஒப்படைக்கப் படுகிறதா? என்றால் அது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது.

விமானங்களில், பயணிகளின் பெட்டிகள் பாதுகாப்பாக அல்லாமல் ஊழியர்கள் வீசி எறிவதை பார்த்திருப்போம். அதேபோல ரயில்களில் வந்து இறங்கும் பொருட்கள் வீசி எறியப்படும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து பலரும் எதிர்ப்பு கமெண்டுகளை பதிவிட்டு, தங்களது வருத்தங்களை இணையத்தில் தெரிவித்து வந்தனர்.

மேலும், அஹமெத் கபீர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோவானது சுமார் 2.9 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, பல்லாயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, இந்த வீடியோ குறித்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

இந்த வீடியோ மிகவும் பழமையானது என்றும், அது, கடந்த பிப்ரவரி மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்டதாகவும் கூறிய வடகிழக்கு எல்லை ரயில்வே, தனது ட்விட்டர் பக்கத்தில், “பிப்ரவரி 22, 2022 தேதியிட்ட சரக்கு சந்தைப்படுத்தல் சுற்றறிக்கை எண். 05 இல் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இலக்கு அல்லது இடைநிலை நிலையங்களில் (எஸ்எல்ஆர்/பார்சல் வேன்களில்) தங்கள் பார்சல்களை ஏற்றுவது/இறக்குவது கட்சியின் முழுப் பொறுப்பாகும்.” எனக் கூறி விளக்கம் அளித்துள்ளது.