குடித்துவிட்டு குப்புறப்படுத்த அங்கன்வாடி சமையல் உதவியாளர்.. போதை தலைக்கேறியதால் மட்டை

குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் மதுபோதையில் வந்து, அங்கன்வாடி மையம் முன்பு விழுந்து கிடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குடித்துவிட்டு குப்புறப்படுத்த அங்கன்வாடி சமையல் உதவியாளர்.. போதை தலைக்கேறியதால் மட்டை

கும்பகோணம் அருகே அரியதிடல் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் மீனாட்சி என்ற பெண் சமையலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை அங்கன்வாடிக்கு சமையல் வேலைக்கு வந்த மீனாட்சி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. மதுபோதை தலைக்கு ஏறியதால் மீனாட்சி நடக்க முடியாமல் தள்ளாடிய படி அங்கன்வாடி மையம்  முன்பு அமர்ந்துள்ளார்.

இதனைபார்த்த அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் உங்களை எந்த அதிகாரி வேலைக்கு அனுப்பியது, சமைக்க வந்தீர்களா? உங்கள் உடலுக்கு என்ன செய்கிறது.? உங்களை அழைத்துச் செல்ல உங்கள் கணவர் வருவாரா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். 

எதற்கும் பதில் சொல்ல முடியாத அளவிற்கு போதை அவரை ஆட்கொண்டது. நிதானமின்றி மது போதையில் தனது சேலை விலகுவது கூட தெரியாமலும், செல்போன் அழைப்பை எடுக்க முடியாத அளவிற்கு மையம்  முன்பு அமர்ந்திருந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கன்வாடி மேற்பார்வையாளர் ஜெயந்தி, தமிழ்ச் செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். 

அப்போது அங்கிருந்த குழந்தைகளின் பெற்றோர் மீனாட்சி மீது புகார் தெரிவிக்கவே துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அங்கன்வாடி மையம் முன்பே மதுபோதையில் மட்டையாகி படுத்துவிட்டார்.