விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்... வயலில் கிடைத்த வைரம்!!

விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்... வயலில் கிடைத்த வைரம்!!

ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் அருகே, வயலில் கிடைத்த வைரம், 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. 

கர்னூல் மாவட்டத்தின் ஜி. எர்ரகுடி கிராமத்தில் பெண் ஒருவர் விவசாய நிலத்தை சமன் செய்தபோது வைரம் ஒன்று கிடைத்துள்ளது. பொதுவாக அப்பகுதிகளில், முதல் மழை பெய்தவுடன், வயல்வெளிகளில் வைரங்களை தேடும் பணியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. 

அதேபோல், சமீபத்தில் கர்னூல் மாவட்டத்தில் ஒரு விவசாயியின் பயிர் அறுவடை செய்யப்பட்டுள்ளது.  விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு வைரம் கிடைத்தது. இதையறிந்த வைர வியாபாரிகள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து ஏலம் விட்டதில் ஒருவர் 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். 

இந்த பகுதியில் வழக்கமாக சாதாரண வைரம் கிடைக்கும் நிலையில், இந்த சீசனில் கிடைக்கும் வைரம் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ளூர் வாசிகள் வைர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க || சிறப்பு பிாிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்!!