'Work From Home' கட் செய்து அலுவலகத்திற்கு வர சொன்ன நிறுவனம்..! வேலையை ராஜினாமா செய்த ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குநர்!!

நேரடி அலுவலக பணிக்கு அழைத்ததால் ஆப்பிள் நிறுவனத்தின் இயந்திர பிரிவு இயக்குநர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

'Work From Home' கட் செய்து அலுவலகத்திற்கு வர சொன்ன நிறுவனம்..! வேலையை ராஜினாமா செய்த  ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குநர்!!

கொரோனா நெருக்கடி காலத்தில் சர்வதேச அளவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் பலதுறையை சேர்ந்தவர்களும் வீடுகளில் இருந்தபடியே அலுவலக பணியை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. குறிப்பாக ஐ டி துறையை சேர்ந்தவர்கள் work from home என்ற புதிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

தற்போது பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் பெரும்பாலான அலுவலகங்களில் மீண்டும் அலுவலக பணிக்கு திரும்ப நிர்வாகம் தரப்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது. ஆனால் work from home என்ற புதிய பணி சூழலுக்கு தங்களை ஆளாக்கிக் கொண்ட பணியாளர்கள் மீண்டும் நேரடி அலுவலக பணிக்கு செல்ல விரும்பாமல் வேலையை ராஜினாமா செய்வது அதிகரித்துள்ளது. அதன்படி நேரடி அலுவலக பணிக்கு அழைத்ததால் ஆப்பிள் நிறுவனத்தில் இயந்திர பிரிவு இயக்குநர் இயன் குட்ஃபெலோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.