சிலந்தியை போல் சுவற்றில் ஏறி அசத்தும் சிறுமி- வீடியோ வைரல்....

சிலந்தியை போல் சுவற்றில் வேகமாக ஏறும் சிறுமியின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

சிலந்தியை போல் சுவற்றில் ஏறி அசத்தும் சிறுமி- வீடியோ வைரல்....

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனிதிறமை ஒன்று இருக்கும். அது போல் ஒரு சிறுமி தனது கைகளையும் கால்களையும் லாவகமாக பயன்படுத்தி, சிரமமின்றி தனது வீட்டில் உள்ள உயரமான சுவரில் எந்த வித கருவியின்  உதவியின்றி மட மடவென்று ஏறுகிறார்.

சுமார் 5 வயதுடைய இந்த சிறுமி, எந்த வித உதவியும், பிடிப்பும் இல்லாமல் நிமிடங்களில் சிரமமின்றி சுவரில் வேகமாக ஏறுவது காண்போரை வியக்க வைத்துள்ளது.

பின்புறமாக நின்று கை கால்களை பயன்படுத்தி வேகமாக சுவரில் ஏறும் சிறுமி, சுவற்றின் உச்சிப்பகுதிக்கு சென்றதும் தன் இரண்டு கால்களையும் சுவற்றில் பிடியில் இருந்து எடுத்து கைகளால் மட்டும் சுவற்றை பிடித்தவாறு நிற்கிறாள். இந்த வீடியோ இணையத்தில் பரவி பலரையும்  ஆச்சர்யபடவைத்துள்ளது.