10 வயது மகனுடன் ஆபாச நடனமாடிய பெண் மீது குவியும் புகார்கள்: நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

10 வயது மகனுடன் ஆபாசமாக நடனமாடி அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி மகளிர் ஆணையம் போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

10 வயது மகனுடன் ஆபாச நடனமாடிய பெண் மீது குவியும் புகார்கள்: நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்டவைகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் செயல்களில் பலர் இறங்கியுள்ளனர்.  மத்திய அரசு இதன் மூலம் விரைவில் பிரபலமடைவதுடன் நிறைய பணம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். இதற்காக கவர்ச்சி, சர்ச்சை, விதிமீறல் உள்ளிட்ட செயல்களில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.பெண் சமூகவலைதளங்கள் அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் சமூகவலைதளங்களில் பதிவு செய்திருக்கும் வீடியோ அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. 
 
10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்கிறார்கள். 10 வயது சிறுவன் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில் 10 வயது சிறுவனுடன் ஆபாசமான முறையில் நடனமாடி அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பெண் நடனமாடிய சிறுவன் அவரது மகன் என கூறப்படுகிறது. வீடியோ பதிவேற்றம் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.
 
 தாய், மகன் என்ற வித்தியாசமின்றி இந்த பெண்ணின் நடனத்தை பார்ப்போர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். நோட்டீஸ் பணம் சம்பாதிக்க எந்த நிலைக்கும் செல்ல தயாராகியுள்ள இது போன்ற பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையடுத்து அந்த வீடியோவை அந்த பெண் நீக்கிவிட்டார். இந்த வீடியோ டெல்லி மகளிர் ஆணைய அதிகாரிகளுக்கு சென்றுவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.