புதிய வரவு: சீலிங் ஃபேன் சாமியார்... ஓடும் ஃபேனில் கைவிட்டு அருள்வாக்கு!!

புதிய வரவு: சீலிங் ஃபேன் சாமியார்... ஓடும் ஃபேனில் கைவிட்டு அருள்வாக்கு!!

ஓடும் மின் விசிறியை கையால் பிடித்து நிறுத்தியவாறே ஒருவர் பிறருக்கு அருள் வாக்கு சொல்லும் புது சாமியாரை இணையதளவாசிகள் தேடிப் பிடித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

மாம்பழ சீசன், கொய்யா சீசன், குற்றால சீசன் போல ஒவ்வொரு காலகட்டத்திலும் சாமியார்கள் சீசன்களும் இடம்பெறும். எத்தனையோ சாமியார்கள் தமிழ்நாட்டை கலக்கு கலக்கு என கலக்கி வந்தனர். இந்த வரிசையில் ஒரே நாளில் ட்ரெண்டான வினோதமான சாமியார் தான் இந்த சீலிங் ஃபேன் சாமியார். 

பொதுவாக சாமியார்கள் என்றால் காவி உடை அணிந்து கொண்டு தன்னை நம்பி வந்தவர்களுக்கு மந்திரத்தை சொல்லி சிலிர்த்துப் போய் திருநீறை பூசி விடுவது வழக்கம். ஆனால், திருநீறுக்கு பதிலாக பழைய ஃபேனில் ஒட்டிக் கொண்ட தூசியை திருநீறாக பூசி ஆசுவாசமாகிக் கொள்கிறார் இந்த சீலிங் ஃபேன் சாமியார். 

உறவினர்கள் நான்கைந்து பேர் அவரை கைகளால் தாங்கிக் கொள்ள, ஒய்யாரமாய் அமர்ந்து, இந்த சாமியார் ஓடும் சீலிங் பேனை கையாலேயே நிறுத்தி நெற்றில் பட்டையிட்டு மந்திரம் ஓதுகிறார். இதனை வியந்து பார்த்தவர்கள் கையெடுத்து கும்பிடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோக்கள் அனைத்தும் உண்மையா? மார்க்கெட்டில் புதுவகையான சாமியார் அவதரித்து விட்டாரா? அல்லது மனநோயாளி ஒருவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக உறவினர்கள் இவ்வாறு செய்துள்ளனரா? என தலையை பிய்த்துக் கொள்கின்றனர் நெட்டிசன்கள்..  

இதையும் படிக்க || சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!