கியூட்டான டெலிவரி அசிஸ்டெண்ட்! வைரல் வீடியோ பாருங்களேன்!!!

பிசாவை வீட்டிற்கு டெலிவரி செய்ய வந்தவருடன் ஒரு அழகான நாய் இருந்திருக்கிறது. அதன் வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

கியூட்டான டெலிவரி அசிஸ்டெண்ட்! வைரல் வீடியோ பாருங்களேன்!!!

நாய் என்றாலே அது அழகு தான். அது செய்யும் சிறு சிறு விஷயங்களும் நம் மனதை கொள்ளை அடித்துக் கொண்டே இருக்கும். பேச முடியவில்லை என்றாலும், அந்த செல்ல பிராணிகளின் சிறு சிறு குறும்புத்தனங்களும், புத்திசாலித்தனமான செயல்களும், ஒவ்வொரு முறையும் நம்மை வியக்க வைக்கும். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ படு வைரலாகியுள்ளது.

கடந்த மாதம், ஷிவாங் என்பவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், பீசாவை கொடுக்க வந்த டெலிவரி பாயுடன் ஒரு சமத்தான நாய் வந்தது. அதன் பெயர் ஜேக். துரிதமாக டெலிவரி செய்து, நல்ல படியாக பதிலளித்ததாகக் கூறி, அவரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். ஒரு மாதத்திற்கு பிறகு, இந்த வீடியோ தற்போது படு வைரலாகி, அவரது இன்ஸ்டாகிராம் பக்க வீடியோ 1.6 மில்லியன் பார்வையாளர்களை எத்தியுள்ளது. மேலும், லட்சக்கணக்கில் லைக்குகளைப் பெற்று, பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில், “இன்று என் வீட்டிற்கு அழகான டெலிவரி பாய் வந்தார் (செல்ல பிராணி). அவர் பெயர் ஜேக். அவருக்கு நான் 10/10 மதிப்பெண் கொடுப்பேன். ஏன் என்றால், துரிதமான டெலிவரி, நல்ல சேவை!” என்று பதிவிட்டு, இந்த வீடியோவை வைரலாக்குவதில் நான் மகிழ்கிறேன் என்றும், இவரைப் பற்றி அனைவரும் அறிய வேண்டுமென்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை ரசித்த இணையவாசிகள், அந்த செல்ல பிராணி எவ்வளவு கியூட்டாக இருக்கிறது! என்றும், இந்த வீடியோவின் அழகை ரசித்து மாளவில்லை என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், ஒரு சிலர், “எவ்வலவு சமத்தாக அந்த வண்டியில் நாய் ஏறி அமர்கிறது! பார்க்க கியூட்டாக இருக்கிறது” என்று கமெண்ட் செய்துள்ளனர். மற்றொரு பயணி, “நாய் மட்டுமே இந்த பூமியில் தன்னை மிஞ்சி பாசம் செலுத்தும் ஒரு ஜீவன்” என்று கமெண்ட் செய்திருக்கிறார். இன்னொரு நெட்டிசன், “அவர் ஒரு ஸ்வீட் ஹார்ட்! அந்த டெலிவரி பாய்க்கு எந்த பிரச்சனையும் கொடுக்காமல் சமத்துப் பிள்ளையாக இருக்கிறது பாருங்களேன்!” என்று கமெண்ட் செய்து மருபகிர்வு செய்திருக்கிறார்.

இந்த வீடியோ படு வைரலாக பகிரப்பட்டு மீம் பேஜ்கள் முழுவதும் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் இந்த டெலிவரி பாயிடம் உணவு பெற்றுக் கொள்ள ஆசை படுவதாக பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த வீடியோ, மனதைக் கிள்ளும் வகையில், அழகாக இருப்பதாகவும் கூறி பதிவிடுவது குறிப்பிடத்தக்கது. அந்த அழகான வீடியோவை பார்த்து மகிழுங்கள்!