த்ரெட்ஸை களமிறக்கிய மெட்டா... வாங்க எப்படி இருக்குனு பார்க்கலாம்!!

த்ரெட்ஸை களமிறக்கிய மெட்டா... வாங்க எப்படி இருக்குனு பார்க்கலாம்!!

தற்போது இணைய பக்கம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஓர் செய்தி என்னவென்றால் Instagram threads எனும் புதிய செயலிதான். தற்போது அவை இணையத்தில் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.

‘மாறும் என்ற வார்த்தை மட்டும் தான் மாறாது’ என்ற உலகின் தலைசிறந்த தத்துவத்தின்படி ஒரு தலைமுறை அடுத்த கட்டத்திற்கு நகரும்போது மாற்றங்கள் ஏற்படுவது இயல்பே, அது அனைத்திற்கும் பொருந்தும். தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை சில ஆண்டுகள், சில மாதங்கள், சில நாட்கள், சில மணி நேரத்தில் கூட அடுத்த கட்ட UpDate version முழுவதும் பழைய தொழில்நுட்பத்தை அழித்து விடும். மக்கள் பயன்பாட்டிற்குத் தேவையான தொழில்நுட்பம் ஒரு பக்கம் இருந்தாலும், பொழுது போக்கிற்கான செயலிகளைத்தான் நாம் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

90களின் இறுதியில் Yahoo Messenger பின் Orkut என வந்தாலும் சில ஆண்டுகளிலேயே அவை காணாமல் போனது. பின் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என ஏராளமான பொதுத்தளம் மனிதர்களின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. இதனை பின்னுக்குத் தள்ள சில ஆண்டுகள் எந்த தொழில்நுட்பத்தாலும் முடியாது என்பதே நிசப்தமான உண்மை. ஆனாலும் சில சில செயலிகள் வரும் சில காலம் பேசப்படும் பின் காணாமல் போகும் அவ்வாறாகத் தற்சமயம் இணையவாசிகளால் பேசப்பட்டு வரும் செயலிதான் Instagram threads.

உலக இணைய வாசிகளின் வன்மத்தை பெற்று வரும் ட்விட்டரின் கதையை முடிக்க, மெட்டா தனது புதிய ஆயுதத்தை களம் இறக்கியுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரை தனது பொறுப்பில் எடுத்த பின்னர், குறுகிய காலத்தில் ப்ளூ டிக், கோல்டன் டிக் கட்டணச் சர்ச்சை, ஆட்குறைப்பு நடவடிக்கை, பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் மற்றும் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட 'Tweet Limit' என எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகள் நெட்டிசன்களை கடுப்பாக்கியது. ஒரு சில சமயங்களில், ட்விட்டர் பயனர்களுக்கே ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில், பல விதிமுறைகளை கொண்டு வந்தார். இந்நிலையில், மெட்டா நிறுவனம் தனது அடுத்த செயலியை வெற்றிகரமாக களம் இறக்கியுள்ளது. இந்த செயலியின் பெயர் த்ரெட்ஸ் (Threads). இந்த செயலியை, இன்ஸ்டாகிராமின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்துள்ளது மெட்டா. இந்த செயலியை, இணைய வாசிகள் ட்விட்டரை எவ்வாறு உபயோகப் படுத்தினார்களோ, அதே போல் த்ரெட்ஸிலும் உலா வரலாம். த்ரெட்ஸ் செயலியின் இலச்சினை (லோகோ) தமிழின் 'கு' எழுத்து போல் இருப்பதாகவும், மலையாளத்தில் 'Thra' (த்ரெ) என்ற ஒலி கொண்ட எழுத்தின் சாயலில் இருப்பதாகவும் இந்தியாவில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

செயல்பாடு:

1.மொபைலில் Play Store ல்  Instgram threads என்ற App ஐ Install செய்ய வேண்டும்.

2.நீங்கள் கட்டாயம் Instagramல் Account வைத்திருக்க வேண்டும்

3. Automatic காக உங்கள் Insta பக்கம் Threads பக்கம் முகப்பில் Sync ஆகி விடும்.


அமைப்பு & செயல்பாடு:

1.Twitter யை போன்ற வடிவமைக்கப்பட்டுள்ளதால், நீங்கள் Twitter பயன்படுத்துபவர்களாக இருந்தால் இதை Handle செய்வது எளிது.

2.500 எழுத்துக்கள் இதில் நீங்கள் பதிவிடமுடியும்

3.போட்டோ பதிவிடலாம் ஆனால் Facebook Instagram போன்று Edit மற்றும் Filter, Music லாம் போட முடியாது.

4. போட்ட போஸ்டுகளை திருத்தியமைக்க முடியாது

5.Inbox Messanger கிடையாது

6. சமீபத்தில் ட்விட்டரில் 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும் என்ற அப்டேட்டிற்கு, பயனர்கள் ட்விட்டரில் அதிக நேரம் செலவிடுவதால், அவர்களின் மேல் அக்கறை கொண்டு இந்த செயலை செய்ததாக, எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால், த்ரெட்ஸில், பயனர்களே தான் விரும்பும் நேர அளவை, இடைவேளை நேரமாக அமைத்துக்கொள்ள முடியும்.

7.த்ரெட்ஸில் பயனர்கள் பதிவிடுவதை, நேரடியாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் பகிர்ந்துகொள்ளலாம். இங்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. பயனர் ஒருவர், இன்ஸ்டாகிராமில் ஒரு கணக்கை பிளாக் மற்றும் ரிப்போர்ட் செய்யும் பட்சத்தில்,  த்ரெட்ஸிலும் தானாகவே அதே கணக்கை பிளாக் மற்றும் ரிப்போர்ட் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக கூறவேண்டுமானால், ட்விட்டருக்கு மாற்று செயலியாக விளங்கும் வகையில் த்ரெட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.எந்த சித்தாந்தமும் சரி, தொழில்நுட்பமும் சரி அடுத்தகட்டத்திற்கு நகரும்போது சில மாற்றங்கள் நிகழத்தான் செய்யும் ஆனால் காலப்போக்கில் புதிய வழிமுறைகளுக்குத் தகுந்தபடி தகவமைத்துக் கொள்ளாவிட்டால் அவை தோல்வியையே சந்திக்கும். Club House செயலியும் பெரும்பாலானோர் பயன்படுத்தும்போதுதான் நிர்வாக சிக்கல்கள் என்னென்ன உள்ளது எனத் தெரியும். ஒட்டுமொத்தமாக Twitter ன் வீழ்ச்சிக்கு Threads முக்கிய பங்கு வகிக்கும்.

 - மா. நிரூபன் சக்கரவர்த்தி